திருமலை சேருனுவர பகுதியில் தேசிய தலைவரின் அல்பம் மற்றும் சற்றலைற் தொலைபேசிகள் மீட்பாம்

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சொந்தமானதாக கருதப்படும் செய்மதி அன்டனா,தமிழீழ தேசிய தலைவரின் புகைப்பட அல்பம் உட்பட ஒரு தொகுதி பொருட்கள் திருகோணமலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

questionskvoor090500048கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சேருநுவர பகுதிக்கு சென்ற குற்றப்புலனாய்வுத்துறையினரும் திருகோணமலை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின்போது இவை மீட்க்கப்பட்டதாக இலங்கை பொலிஸ் ஊடக பேச்சாளர் குணரெட்ன தெரிவித்தார்.

இந்த தேடுதலின்போது செய்மதி அன்டனா டிஸ்க்-01,செய்மதி தொலைபேசி -05,ஏராளமான விடுதலைப்புலிகளின் சீருடைகள்,தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படங்களை கொண்ட அல்பம் என்பன மீட்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.