இலங்கை இனவாதிகளின் அடக்குமுறையை நேரில் வந்து பார்வையிட பாப்பரசருக்கு அழைப்பு

அகதிகளாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களை இலங்கை அரசு உடன் விடுதலை செய்ய வேண்டும் என்று பாப்பரசர் கடந்த வாரம் அவசரமாகக் கோரியிருந்தார்.  அவர் இவ்வாறு குரல் கொடுத்துள்ளமையை இலங்கைத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் இந்த மனித உரிமைகள் ஆர்வலர்கள் மனப்பூர்வமாக வரவேற்றுள்ளனர்.

popeஇருப்பினும் பாப்பரசர் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்து அகதி முகாம்களை பார்வையிடுவதுன் மூலமாகவே தமிழ் மக்கள் மனிதாபிமானமற்றமுறையில் கொடூரமாக நடத்தப்படுகின்றமையை நேரில் காண முடியும் என்று அவர்கள் பாப்பரசருக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

இலங்கைத் தமிழ் மக்களுக்காக சர்வதேச ரீதியில் குரல் கொடுத்து வரும் மனித உரிமைகள் ஆர்வலர்களான பாதிரியார் வணபிதா பன் ஜோக்டன், வைத்திய கலாநிதி பிரைன் செனிவிரட்ண ஆகியோர் இந்த அவசர அழைப்பை பாப்பரசருக்கு விடுத்துள்ளார்கள்.

இலங்கைத் தமிழ் அகதிகளில் அநேகமானவர்களுக்கு சொந்தமாக சென்று மீள்குடியேறுவதற்கு வீடுகள் கிடையாது. அவர்களின் வீடுகள் யுத்தத்தில் அழிந்து விட்டன. அதே நேரம் ஏனைய தமிழர்களின் வீடுகளில்  சிங்களவர்கள் குடியேறியிருக்கிறார்கள். மீள்குடியேற்றப்படும் தமிழர்களின் உயிருக்குக் கூட உத்தரவாதம் இல்லை. ஆகவே தான் சட்டவிரோதமானமுறையில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தப்பிச்செல்ல  அவர்கள் முயற்சிக்கின்றனர்.

எனவே இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அதே நேரம் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற இலங்கைத் தமிழ் அகதிகளை ஆஸி  இலங்கைக்குத் திருப்பி அனுப்புமானால் அந்தத் தமிழர்களுக்கு  மரண தண்டனை வழங்குகின்றமை போலாகிவிடும். இதே நேரம் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமை இன்னமும் பரிதாபமாக உள்ளது. இந்த அகதி முகாம்கள் அண்மைய பருவப் பெயர்ச்சி மழையினால் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.