இலங்கை – தமிழீழம் விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது – ஹிந்துஸ்தான் டைம்ஸ்

இலங்கை விவகாரங்களில் இந்திய மத்திய அரசாங்கம் தலையீடு செய்யக் கூடாது என பெரும்பான்மையான இந்தியர்கள் கருதுவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
இலங்கை விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

tamilnadu-tamileelam-nerudalபிராந்தியத்தின் பலம்பொருந்திய நாடு என்ற வகையில் இந்தியா, இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்வது பொருத்தமாகாதென அநேக இந்தியர்கள் கருதுகின்றனர்.
 
இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என 59 வீதமான மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
 
இலங்கையில் இராணுவ சூழ்ச்சி இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுக்க இந்தியா துருப்புக்களை நிலைநிறுத்தியுள்ளதாகவும் வெளியான செய்திகளை இந்திய மத்திய அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இலஙகையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யாது என வெளிவிவகார அமைச்சர் ஷசி தாகூர் அறிவித்திருந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.