ஜனவரிக்கு முன் மீள்குடியேற்றம் நிறைவுபெறும்: ஹோம்ஸ் நம்பிக்கை

வவுனியா நிவாரண முகாம்களிலுள்ள மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் முழுமையாக மீள்குடியேற்றப்படுவர் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

TC0227JHஅரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று நான்குநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்த அவர் இன்று வவுனியா நலன்புரி கிராமங்களுக்கு விஜயம் செய்த பின்னர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் துரிதகதியில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் மற்றும் முகாம்களிலுள்ள மக்களுக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் தாம் திருப்தியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.