ஜோன் ஹோல்ம்ஸ் – தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கிடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான மனிதாபிமான விவகார விசேட பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்  இன்று சந்தித்துள்ளனர்.

tnaஇன்றைய இந்த விசேட சந்திப்பில் வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை உடடியாக மீள்குடியமர்த்துவது, உறவினர்கள் மற்றும் உறவினர்கள் குடும்ப உறவுகளைப் பிரிந்து வெவ்வேறு இடங்களில் தொடர்பின்றி இருப்பவர்களை ஒன்றிணைப்பது, போரின் போது காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தற்போது தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருப்போர்களது விபரங்களை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, மூதூர் மற்றும் மெனிக்பாம் உள்ளிட்ட இடம்பெயர்ந்த முகாம்களில் தொடர்ச்சியாக விசாரணைக்கென மக்கள் அழைத்துச் செல்லப்படுவது, யாழ்ப்பாணம்  வலிகாமம் பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலய அறிவிப்பை நீக்கி மக்களை மீளக் குடியமர்த்துவது, சிறைக் கைதிகளது பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பது, கிழக்கில் அத்து மீறிய குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவது, சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களில் தகவல் வெளியிடப்படாத 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுத்தல், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து ஆலோசனை வழங்குதல் யுத்தம் முடிவடைந்த பின்பும் தொடருகின்ற அச்ச சூழலை நீக்குவது உள்ளிட முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார்.

இன்றையை சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பா. அரியநேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பத்மின சிதம்பரநாதன், சிறிகாந்தா டொக்டர் தோமஸ் வில்லியம் அகியோர் கலந்து கொண்டதாகவும் பா. அரியநேந்திரன் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.