வடக்கு கிழக்கிற்கான பயணக் கட்டுப்பாடுகளை ஜப்பான் தளர்த்தியுள்ளது

இலங்கையின் வடக்கு கிழக்கு பாகங்களுக்கு செல்வது ஆபத்தாக அமையக் கூடும் என ஜப்பான் அரசாங்கம் இதுவரையில் தமது நாட்டு பிரஜைகளுக்கு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கிற்கான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.

japan1கிழக்கு மாகாணத்திற்கான பயணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி பயணிக்க வேண்டும் எனவும், வடக்கு மாகாணத்திற்கான பயணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதுவரை காலமும் ஜப்பான் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான பயணங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.