டென்மார்க் தமிழர் பேரவையின் அறிமுக ஒன்றுகூடல்

“டென்மார்க் தமிழர் பேரவையின் தற்காலிக செயற்குழுவினர் பொதுக்கூட்டத்திற்கு முன்னர் டென்மார்க் நகரங்களில் பல சந்திப்புகளை நடாத்தி வருகின்றனர். டென்மார்க்கில் ஜனனாயக பேரவை உருவாக்கப்படுகின்றது என்பதில் அனைவரும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதற்காகவும் எமது உறவுகளுடன் கலந்துரையாடி அவர்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பெற்று ஒரு பலமான ஜனனாயக கட்டமைப்பை டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மக்களிடம் அமைக்க வேண்டும் என்பதற்காவும்.” என டென்மார்க் தமிழர் பேரவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இருபதிற்கு மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து சிறிலங்கா அரசு நடாத்திய இன அழிப்பினை தொடர்ந்து திறந்த வெளிச் சிறைகளில் குரல்வளை நசுக்கப்பட்டு வாழும் எமது உறவுகள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளதை நீங்கள் அனைவரும் அறிந்ததே.

மீறி செயல்படுபவர்களை சிறிலங்கா அரசு தனது இரும்பு சட்டங்கள் கொண்டு சிறைபடுத்திவருகின்றதுஇப்பொழுது எமது இனத்தின் அரசியல் அபிலாசைகளை அனைத்துலக சமுகத்திடம் சுயமாக எடுத்து கூற புலம் பெயர்ந்து வாழும் எம்மால் மட்டுமே முடியும். எமது தாயக விடுதலைப் போராட்டம் புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களிடமே உள்ளது என எமது ஏகபிரதிநிதிகளான தமிழீழவிடுதலைப்புலிகளும் அவர்களது தலைமை செயலகத்தால் இறுதியாக வெளியிட்ட அறிக்கையில் சுட்டிகாட்டியுள்ளனர்.

எமது இனத்தின் அரசியல் அபிலாசைகளை எடுத்து கூறுவதர்கு ஒரு ஜனநாயக கட்டமைப்பு அவசியம். அவ்வாறான ஒரு கட்டமைப்பை கட்டியமைக்கும் முயர்சியில் புலம்பெயர் ஈழத்தமிழ் சமுகம் சகல நாடுகளிலும் ஈடுபட்டுவருகின்றது. நோர்வே, பிரித்தாணியா, பிரான்சு, யேர்மனி, நாடுகளை தொடர்ந்து டென்மார்க்கிலும் டென்மார்க் தமிழர் பேரவை எனும் ஜனநாயக அமைப்பை அமைக்க கடந்த சில மாதங்களாக பல ஆர்வலர்கள் சேர்ந்து முயர்சி செய்து வருவதை ஊடகங்கள் முலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

முதலாவதாக எமது பேரவைக்கான சட்டவரையமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இப்பொழுது சட்டவரையமைப்பு பூர்த்தியாகும் நிலையில் உள்ளது. எமது முழுமையான சட்டவரையமைப்பு முதலாவது பொதுக்கூட்டத்தில் ஆணை பெற்றவுடன் செயல்வடிவம் கொள்ளும்.

முதலாவது பொதுக்கூட்டத்தை 10.01.2010 ஞாயிற்றுகிழமை நாடாத்த நாம் தீர்மானித்துள்ளோம்.

ஆத்துடன் 1977 ஆண்டு எந்தவித அடக்குமுறை சட்டமும் அற்ற நிலையில் ஈழத்தமிழ்மக்களால் அனைத்து தமிழ் அரசியல் அமைப்பிற்கும் வழங்கப்பட்ட ஆணையாகிய வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீள் வலியுறுத்தி டென்மார்க்கில் வாழும் ஈழத்தமிழ் மக்களிடம் ஒரு வாக்கெடுப்பை 31.01.2010 அன்று நடாத்தவும் தீர்மானித்துள்ளோம்.

டென்மார்க் தமிழர் பேரவையின் தற்காலிக செயர்குழுவினர் பொதுக்கூட்டத்திற்கு முன்னர் டென்மார்க் நகரங்களில் பல சந்திப்புகளை நடாத்தி வருகின்றோம். ஏனெனில் டென்மார்க்கில் இவ்வாறு ஓர் ஜனநாயக பேரவை உருவாக்கப்படுகின்றது என்பதில் அனைவரும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதற்காகவும் எமது உறவுகளுடன் கலந்துரையாடி அவர்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பெற்று ஒரு பலமான ஜனநாயக கட்டமைப்பை டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மக்களிடம் அமைக்க வேண்டும் என்பதற்காவும்.

அன்பார்ந்த எமது உறவுகளே!

இது எமது கடமை! நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது. என்ற எமது தேசிய தலைவரின் சிந்தயைக்கேற்ப்ப எல்லோரும் ஒன்றுபட்டு எமது இனத்திர்காக செயல்படுவோம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

மேலதிக தொடர்புகளுக்கு: 22461178 சந்தோஸ் மனோகரன் (தற்காலிக இணைப்பாளர்).

மின்னஞ்சல்: forum@dansktamilskforum.dk

அறிமுக ஒன்றுகூடல்கள் நடைபெற இருக்கும் இடங்களின் விபரம் பின்வருமாறு:

dk-arikkai

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.