தமிழக மீனவர்களுக்கும் தமிழீழ மீனவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்

தமிழகத்தில் மீனவர்களுக்கிடையே எழுந்துள்ள எழுச்சியையும் சிங்கள அரசுக்கு எதிரான மீனவர் போராட்டத்தையும் மழுங்கடிக்கவும் அதை திசை திருப்பவும் நிகழ்வுகள் நடப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

vilippu-nerudalஅதாவது தமிழக மீனவர்களை இலங்கைத் தமிழ் மீனவர்கள் திட்டுவதாகவும் இலங்கைத் தமிழ் மீனவர்கள்தான் சிங்கள அரசுக்கு செய்தி அனுப்பி சிங்களப் படைகள் தமிழக மீனவர்களை அடித்து துரத்தி அனுப்புகின்றனர் என்றும் இதற்கு ஆதாரமாக சி.டி க்கள் இருப்பதாகவும் தமிழக மீனவர்களை வெறுப்படையச் செய்ய திட்டமிட்டே கொடுமையான செய்திகளை மீனவர்களிடையே பரப்பப்படுகின்றன.

இந்தத் துரோகத்திற்கு துணையாக தமிழகத்திலுள்ள சில வார இதழ்களின் நிருபர்கள் இருப்பதாகவும் இலங்கைத் தமிழ் மீனவர்களை டக்லஸ் தேவானந்தம் குருப்பினர் தமிழக மீனவர்களுக்கு எதிராக செயல்படும்படி மிரட்டுவதாகவும் நம்பத் தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஈழப் போராட்டத்தை மழுங்கடிக்க பல்வேறு திசைகளிலும் எதிரிகளும் துரோகிகளும் முற்படுகின்றன. தமிழக மீனவர்களிடம் எழுந்துள்ள எழுச்சியை ஈழ போராட்டத்திற்கு எதிராக திசை திருப்ப முற்படுகின்றனர். நாளை மறுநாள் மீனவர் தினத்தை கொண்டாடப் போகும் மீனவர்களிடம் உண்மையான செய்திகளை எடுத்து செல்லவேண்டிய முக்கியக் கடமை தமிழர்கள் அனைவரையும் சார்ந்ததே.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.