சரத் போன்சேகாவுக்கான எனது ஆதரவு அவரின் பதிலை பொறுத்தே உள்ளது – மனோ கணேசன்

எனது கேள்விகள் தொடர்பாக சரத் பொன்சேகா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தால் மட்டுமே அதிபர் தேர்தலில் அவருக்கு ஆதரவு தருவது குறித்து பரிசீலிக்கப்படும் என இலங்கை எம்.பி. மனோ கணேசன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

manoganesan21_thumb2தற்போது ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன் என்றும், அதற்காக அக்கூட்டணி எதைச் சொன்னாலும் கேட்டுக்கொண்டிருக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியதாக இலங்கை இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், தேர்தல் தேதி அறிவித்த பின்னரே எங்கள் நிலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மனோ கணேசன் கூறியதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

மேலும். தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. இல்லை என்றும், தன்னால் ஒரு சிங்களரின் வாக்குக்கூட இல்லாமல் நாடாளுமன்றம் செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்ததாக இணையதளத் தகவல்கள் கூறுகின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.