தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிக்க இலங்கை தவறியுள்ளதாம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு சரியான அணுகுமுறைகளை பின்பற்றத் தவறியுள்ளதாக சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான பேராசிரியர் ரோஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

RohanGunaratnaஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் உலக சமூகத்திற்கு சரியான செய்திகளை வெளிவிவகார அமைச்சு வெளிப்படுத்தத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதன் காரணமாக இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சரியான முறையில் தரவுகளை ஆராய்ந்து தகவல்களை வெளியிடக் கூடிய தொழில்சார் நிபுணர்களை வெளிவிவகார அமைச்சு பணிக்கு அமர்த்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கருத்துக்களை பின்பற்றுவவோர் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த இனியும் ஆயுதங்களை பயன்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
துப்பாக்கிகளினாலோ அல்லது வெடி குண்டுகளினாலோ பிரபாகரன் ஆதரவாளர்களை மாற்றுவதனைவிடவும் ஊடகங்களின் மூலம் மாற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்புக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரங்களை முறியடிக்கக் கூடிய வகையிலான ஊடக பிரச்சாரமொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இணையத்தில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் முறியடிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் பிரச்சாரங்களின் மூலம் சர்வதேச அரங்கில் பாதிப்புக்கள் ஏற்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
குறிப்பாக சுற்றுலாத்துறை பாதிக்கப்படக் கூடிய அபாயம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நோர்வ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கி வந்ததாகவும்இ தற்போதும் ஆதரவளித்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.