பொருளாதார நெருக்கடி சகலரையும் பாதிக்கும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அது சகலரையும் பாதிக்கும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடுமென சர்வதேச நாணய நிதியத்தின் வெளியுறவுத்துறைப் பணிப்பாளர் கரோலின் எட்கின்சன் தெரிவித்துள்ளார்.

imf-logoமனித உரிமை காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கடன் வழங்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைந்தால் ஒட்டு மொத்த மக்களே அதனால் பாதிக்கப்படக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.