இலங்கைக்கு அடுத்தாண்டு நடுப்பகுதியில் ஜீஎஸ்பி கிடைக்கலாம்: ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கைக்கு எதிர்வரும் 2010ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படலாம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றப்பத்திரிக்கைக்கு உரிய காரணங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில் இந்த சலுகை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக பொது பணிப்பகத்தின் பிரதித் தலைவர் பீற்றர் யங் தெரிவித்துள்ளார்.

european-central-bank_1292ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்குவது தடைசெய்யப்படுமானால், அது குறித்து நிறைவேற்றுக் குழு தீர்மானித்து 6 மாதங்களின் பின்னரே அந்த தடை அமுலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் படி, இலங்கைக்கு அடுத்து ஆண்டின் நடுப்பகுதி வரையில் இந்தச் சலுகை வழங்கப்படும் என அவரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தடை செய்யப்பட்ட அறிவிப்பு வெளியானாலும், சரியான முனைப்புகளுடன் அரசாங்கம் புதிய முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்து, மீண்டும் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு முயற்சிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.