இடம்பெயர் முகாம்களுக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீண்டும் கோரிக்கை

இடம்பெயர் முகாம் மக்களை பார்வையிடுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிடுவது தொடர்பில் அரசாங்கம் விதித்துள்ள தடைகளை களைய வேண்டுமென எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

nerudal-tamil-news1யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்த மக்கள் எவ்வாறு மீள் குடியேற்றப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
 
மக்களின் நிலைமைகளை பார்வையிட சந்தர்ப்பம் அளிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இடம்பெயர் மக்களை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.