ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசீய புனிட்டாசிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
 
என்ன காரணத்திற்காக இந்த சந்திப்பு நடைபெற்றதென்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Gen_Sarath_Fonsekaஎவ்வாறெனினும், ஜெனரல் சரத் பொன்சோக அமெரிக்கத் தூதுவரை சந்தித்தாரா இல்லையா என்பது குறித்து கருத்து வெளியிட முடியாது என அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
 
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்த ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்கா ஒர் கருவியாக பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அண்மையில் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
 
சரத் பொன்சேகா அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த போது யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்கள் கோரப்பட்ட போதிலும் இலங்கை அரசாங்கம் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியது.
 
இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி அமெரிக்க செல்லும் இலங்கையின் உயர் அதிகாரிகளை விசாரணை செய்ய முடியாது என அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.