விடுதலைப் புலிகளுக்கு கலைஞர் என்றுமே ஆதரவாக இருந்ததில்லை: ராமதாஸ்

விடுதலைப் புலிகளுக்கு கலைஞர் என்றுமே ஆதரவாக இருந்ததில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வேலூரில் நடக்கும் பாமக மாவட்ட மாநாட்டிற்கு அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வந்திருந்தார். அப்போது கடந்த 17ஆம் தேதி விடுதலைப்புலிகள் குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை பற்றி செய்தியாளர்கள் ராமதாசிடம் கருத்து கேட்டனர்.

ramadஅதற்கு பதில் அளித்த ராமதாஸ், கலைஞர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஈழத்தமிழினத்துக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் என கலைஞர் நடத்துவார். ஆனால் ஆளுங்கட்சியானால், ஆட்சியில் அமர்ந்தால் எதுவுமே செய்வதில்லை.

கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது ஈழத்தமிழனத்துக்காக செயல்பட்டு இருந்தால் இந்நேரம் தனி தமிழ் ஈழம் பிறந்திருக்கும் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.