தேர்தலில் யார் வேட்பாளராக குதித்தாலும் அரசு அஞ்சாது

எந்தவொரு  தேர்தலைக் கண்டும் அரசு  பயப்படவில்லை  என்று அமைச்சரவை பேச்சாளரும், ஊடக அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

எவர் வேட்பாளராக களம் இறங்கினாலும் அவர்களை கண்டு தாங்கள் அச்சமடையப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் இடம் பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

anura-piriyadarshana-yappaஜனாதிபதிகள் பலரை உருவாக்கிய,  அரசமைப்பை மாற்றிய, நாட்டுக்கு சுதந்திரத்தை வாங்கிக்கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சி இன்று எவ்விதமான நோக்கமும் இன்றி செயற்படுகிறது எனவும்  அவர் இதன் போது குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறான ஐக்கிய தேசியக் கட்சி, தமது வேட்பாளரைக் கேட்டால் தேர்தல் தினத்தை அறிவிக்குமாறு கோருகிறது எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடக அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா   குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.