முன்னாள் போராளிகள் சித்திரவதைக்கு உட்படுத்தக் கூடிய அபாயம் நிலவுகிறது – சர்வதேச மன்னிப்புச் சபை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படக் கூடிய அபாயம நிலவுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சிறுவர் போராளிகள் உள்ளிட்ட பெருந்தொகையான விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தற்போது பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

amnesty2தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குறைந்தபட்சம் 12000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
குறித்த உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
விடுதலைப் புலி சந்தேக நபர்களை விசாரணை செய்யும் பொறிமுறையில் வெளிப்படைத் தன்மையில்லை என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
 
முன்னாள் போராளிகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின் போது சர்வதேச சட்ட திட்டங்கள் பின்பற்றப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.