யுத்தம் நிறைவடைந்து ஆறு மாதங்களாகியும் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆயுத போராட்டம் முடிவடைந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அரசியல் தீர்வுத் திட்டம் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை என ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

question_3dதமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் அரசியல் ரீதியான பிரச்சினைகளக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனை காட்டவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
சிறுபான்மை கட்சிகளினால் எழுப்பப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
முதலில் இடம்பெயர் மக்களை முழுமையாக மீள் குடியேற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும், பின்னர் சகல கட்சிகளினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காத்திரமான அரசியல் தீர்வு குறித்து ஆராயப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசியல் தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்கு முன்னர் இடம்பெயர் முகாம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், எப்போது அரசியல் தீர்வுத் திட்டங்கள் குறித்த முனைப்பு முன்னெடுக்கப்படும் என்பது குறித்து அவர் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.