இடம்பெயர் மக்கள் சுதந்திர இடம்நகர்வு குறித்த அறிவிப்பு ஓர் தேர்தல் நாடகம் ‐ ஐ.தே.க

இடம்பெயர் மக்கள் சுதந்திரமாக இடம் நகர முடியும் என அரசாங்கம் நேற்றைய தினம் விடுத்த அறிவிப்பு ஓர் தேர்தல் நாடகம் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் வடக்கு இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் சுதந்திரமாக இடம் நகர முடியும் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ நேற்று செட்டிக்குளத்தில் வைத்து அறிவித்தார்.

tissa-athanayakkaஎதிர்வரும் தேர்தல்களை இலக்காக வைத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
 
சரியான ஏற்பாடுகளை மேற்கொள்ளாது மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேவேளை, இடம்பெயர் முகாம் மக்கள் சுதந்திரமாக இடம் நகர அனுமதிப்பதன் மூலம் அநேக மக்கள் நகர் புறங்களில் குடியேற முயற்சிக்கக் கூடுமென பிரதேச அரசாங்க அதிபர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
உரிய உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தாது மேற்கொள்ளப்படும் மீள் குடியேற்றம் வெற்றிகரமாக அமையாது என சுட்டிக்காட்டப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.