இடம்பெயர் மக்கள் சுதந்திரமாக இடம்நகர்வதற்கான அனுமதி பாராட்டுக்குரியது – ஐ.நா

இடம்பெயர் மக்கள் சுதந்திரமாக இடம் நகர்வதற்கு வழங்கப்படவுள்ள அனுமதி பாராட்டுக்குரியதென ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
உள்ளக இடம்பெயர்விற்கு ஆளான மக்கள் சுதந்திரமாக இடம் நகர முடியும் என இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு வரவேற்கத் தக்கதென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

unஇடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை மீள் குடியேற்றுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களில் அரைவாசிப் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத் தக்கதென அவர் தெரிவித்துள்ளார்.
 
மீள் குடியேற்ற நடவடிக்கைகளை காத்திரமான முறையில் முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுமாறு அரசாங்கத்திடம், பான் கீ மூன் கோரியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.