லண்டன் தேசிய நினவெழுச்சி நாளில் வைகோ உரையாற்றுவார்

வரும் 27ம் தேதி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

vaiko-londonமாறுபட்ட தகவல்களால் மாவீரர் தின நிகழ்ச்சி குறித்து உலகத் தமிழர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழக தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த வகையில் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்ணைப்பாளர் பழ.நெடுமாறன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சியில் உரையாற்றுவார் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போல லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டென்மார்க் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கனடாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குனருமான சீமான், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பங்கேற்று பேசவிருப்பதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.