சரத் பொன்சேகா எனது கடிதத்திற்கு இன்னமும் பதில் தரவில்லை – மனோ

நான் பொன்சேகாவிடம் சில விடயங்கள் தொடர்பாக எழுத்துமூல விளக்கங்கள் கேட்டிருந்தேன். ஆனால் அவரிடமிருந்து இன்னமும் எழுத்து மூல மறுமொழி ஒன்றும் எனக்கு கிடைக்கவில்லை.  ஆகவே, அவரிடம் இருந்து எழுத்துமூல மறுமொழிகள் கிடைக்கும்வரை எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை. நான் ஒரு சிறிய கட்சியின் தலைவன்தான். ஆனால் நாட்டிலுள்ள அனைத்து தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கிறேன். ஒருவேளை என்னை சிறிய கட்சிக்காரன் என்றோ சின்ன ஆள் என்றோ கருதுபவர்கள் இருக்கக்கூடும். என்று கூறியுள்ளார் மனோ கணேசன்.

interview-pic-manoஜனநாயக மக்கள் முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன் சேகாவை ஆதரிக்கப் போவதாக இன்னமும் முடிவு எடுக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகிறாரென பொன்சேகா உத்தியோக பூர்வமாக  இன்னமும் அறிவிக்கவும் இல்லை. அதேநேரம், பொன் சேகாவை வேட்பாளராக நிறுத்துகின்றமை தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கூடி ஆராயவும் இல்லை  அவர்தான் வேட் பாளர் என்று முடிவெடுக்கவுமில்லை. எனவே, ஜனநாயக மக்கள் முன்னணியினராகிய நாம் தேர்தல் காலம் வரும் வரையும் கட் டாயம் காத்திருக்க வேண்டியவர்களாக உள்ளோம். தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் எல்லா வேலைகளையும் ஆரம்பிப்போம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைபினர் வெளிநாடுகளில் சுற்றித் திரிந்த காலத்தில் கூட கொழும்பில் இருந்தபடி தமிழர்களுக்காக குரல் கொடுத்தவன் நான். என்னால் இயலுமானவரைக்கும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தேன்; தமிழர்களைக் காப்பாற்றினேன். எனது அரசியல் வடக்கு, கிழக்குத் தலைவர்களின் அரசியலிலிருந்தும் வித்தியாசமானது. நான் சிங்களவர்களுடன் அரசியல் நடத்தத் தயாராக எப்போதுமே உள்ளேன். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் சரி, உள்ளூராட்சித் தேர்தல்களிலும் சரி,  என்னால் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றிபெற முடியும். சிங்கள சக்திகளின் எந்தத் துணையும் இல்லாமலேயே என்னால் அவ்வாறு வெற்றிபெறமுடியும். ஆனால் இலங்கை ஒரு தனி நாடு என்று நான் நம்புகின்றேன். இந்த நாட்டுக் குள்ளேயே எமது எதிர்காலம் உள்ளது என்றும் விசுவாசிக்கின்றேன். அதற்காக நான் சிங்களப் பேரினவாதத்துக்கு சோரம் போவேன் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆள்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்வோர் இலஞ்ச, ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்லர். ஆனால் அவர்கள் அலரி மாளிகையையும் நாட்டையும் ஆள்கிறார்கள். ஜனாதிபதியின் ஆள்களால் நாடாளுமன்றம் பல வீனம் அடைந்துள்ளது. இதற்குக் காரணமான நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவேண்டும்.

இன்று என் கண்முன்னால் இரு தேசியப் பிரச்சினைகள் தெரிகின்றன.

  1. நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு.
  2. அகதிகள் மீள்குடியேற்றம்.

இவற்றைச் செய்ய வல்லவரையே, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய ஒருவரையே ஜனாதிபதித் தேர்தலில் எனது கட்சி ஆதரிக்கும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.