‘ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளராக சரத் பொன்சேகா நிறுத்தப்படுவார்’??

இலங்கை அதிபர் பதவிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நிறுத்தப்பட உள்ளதாக அக்கட்சி உறுதிபடுத்தியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான எதிர் கட்சிகளின் கூட்டணி சார்பில், வரவிருக்கும் அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

sarath-fonஎனினும் சரத் பொன்சேகாவிடமிருந்து இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

அதே சமயம் அதிபர் பதவி வேட்பாளராக போட்டியிட தமக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க முடியாது என பொன்சேகா கூறியதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.