அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டங்கள் முறியடிக்கப்படும் – மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கத்திற்கு எதிரான சதித் திட்டங்கள் முறியடிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
நாட்டு மக்களின் நன்மையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே மஹிந்த சிந்தனைக் கொள்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

mahinda2அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் சகல குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.
 
புத்தளத்தில் திறந்த பல்கலைக்கழகமொன்றை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இனினும் இனமத பேதங்களுக்கு இடமளிக்கப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த நாட்டில் இனியும் சிறுபான்மை இனமொன்று அடையாளப்படுத்தக் கூடிய நபர்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
சிறுபான்மை அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் எந்தவொரு கட்சியினாலும் ஆட்சி நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எவராலும் திருடப்பட முடியாத அழியாத சொத்து என்றால் அது கல்விச் செல்வமாகும் எனவும், உரிய வளங்களை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
கல்விசார் பாடநெறிகளின் மூலம் மட்டும் சிறந்த பிரஜைகளை உருவாக்கிவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.