சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சோனாலிக்கு சர்வதேச ஊடக விருது

சண்டே லீடர் மற்றும் மோர்னிங் லீடர் பத்திரிகைகளின் ஆசிரியரான சோனாலி சமரசிங்க விக்ரமதுங்கவிற்கு சர்வதேச ஊடக விருதொன்று வழங்கப்பட்டுள்ளது.
 
ஒக்ஸ்பாம் சர்வதேச ஊடக சுதந்திர விருது சோனாலிக்கு வழங்கப்பட்டுள்ளது.

s-SONALI-largeஊழல் மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான செய்திகளை துணிச்சலுடன் வெளிச்சம் போட்டு காட்டியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
 
வியட்னாம், ஜோர்ஜியா, ஈரான், கொலம்பிய ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சர்வதேச விருது தமக்கு பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிப்பதாக சோனாலி தெரிவித்துள்ளார்.
 
இந்த விருதின் மூலம் ஊடகத்துறைக்கு தாம் ஆற்றிய பங்களிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், ஊடக அடக்குமுறை தொடர்பான இருண்ட வரலாறு தொடர்கதையாக நீடித்துக் கொண்டிருப்பதனை எவரும் மறந்துவிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கை போன்ற நாடுகளில் ஊடக சுதந்திரம், மனித உரிமை மற்றும் ஜனநாயகம் போன்றவை மீறப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தனது கணவரும், தொழில்சார் நண்பருமான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையைத் தொடர்ந்து தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே தாம் வேறு நாடொன்றில் அடைக்கலம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.