இழப்புகளின் மீதான இவர்களின் இருப்புகள்: தமிழர்களின் எதிர்காலம் யார் கையில்?

குளிர்காலம் ஆரம்பித்தால் பனி சூழந்த மலைகள் சுவிசின் அழகை மேலும் அழகாக்கும். இப்போது இங்கே பனிகாலம் மக்கள் போர்வைக்குள் தங்களை புதைத்துக் கொண்டு அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். சூரிச் நகரின் ஒதுக்குப்புறமான ஒரு விருந்தினர் விடுதி வழமைக்கு மாறான பரப்புடன் காணப்படுகிற்னது.

sit-question-markகொஞ்சம் நெருங்கி சென்று பார்த போது எங்களுக்கு பரீட்சயமான பல முகங்களை அடையாளம் காண முடிந்தது. தமிழ் மக்களுக்கு தமிழீழம் தான் தீர்வு என்று முழக்கமிட்ட தளபதி அமிர்தலிங்கத்தின் வழித்தோன்றல்கள் ஆனந்தசங்கரி ஐயாவும் சம்பந்தனும் ஒரே இடத்தில் ஒன்றாக இருப்பது கண்டு ஆச்சரியப்படுட்டுப் போனேன்.

இவர்களோடு இன்னும் பல தெரிந்த முகங்கள் முன்னாள் போராளிகளும் இன்னாள் பக்கா அரசியல் வாதிகளுமான டக்ளஸ் தேவானந்தா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்தன், சிறீதரன் என இலங்கை அரசியலின் சாயம் போனவர்களையும் ஒன்றாக பாhத்த போது திம்புவின் நினைவுகள் மனதில் வந்து போனதை மறைக்க முடியாது தான்.

ஆனால் திம்புவின் பின்னால் வந்த வம்புகளால் எங்கள் இனம் எல்லாம் இழந்து கோமணத்துணியுடன் வன்னியின் புழுதிக் காட்டிற்குள் முடங்கி கிடக்க இங்கே இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்ற தாங்க முடியாத ஆவலில் எட்டிப்பாதத்தேன்.

தமிழ் தகவல் மையம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொள்ளதான் இவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியுள்ளார்களாம்.

இலங்கை அரசியலில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளில் பெரும்பாலானவற்றை ஒன்றாக ஒரே இடத்தில் அணி திரட்டுவது என்பது குதிரைக் கொம்பான விடயம்.

நாங்கள் எப்போதோ கேட்டு மறந்து போன தமிழர் தகவல் மையம் என்ற அமைப்பு இலங்கை அரசியலில் முரண்பட்டு நிற்கும் தரப்புகள் அனைத்தையும் ஒரு மேசையில் உட்கார வைக்கும் அளவிற்கு பலமானதா என்ற சந்தேகம் உங்களைப் போலவே எனக்கும் ஏற்பட்டது.

இதுவே இந்த சந்திப்பின் பின்னணி குறித்து அறியும் ஆவலைத் தூண்டியது.

அதன் போது கிடைத்த தகவல்கள் இனி உங்களுக்காக.
 
இலங்கையில் நீண்டகால யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் அயல் நாடான இந்தியாவிற்கு சார்பானதாக இருக்கவில்லை.

குறிப்பாக இலங்கையின் அபிவிருத்தி பணிகளில் சீனாவின் ஆதிக்கமும் ஸ்ரீலங்கா இராணுவத்திற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான பிணைப்புகளும் இந்திhவை அல்லது இந்திய அரசாங்கத்தை ஆளும் ரோ எனப்படும் புலனாய்வு பிரிவினை அதிகம் கவலைப்படுத்தியுள்ளது.

விடுதலைப்புலிகள் தமது ஆயுதப் போரட்டத்தை கைவிடுவதாக அறிவித்ததன் பின்னர் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு விற்று காசுபார்க்கும் நடவடிக்கைகள் பாதுகாப்பு செயளலாளரால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆயுதங்கள் பாகிஸ்தானால் வேறு நாடுகளில் இருந்து பெறப்பட முடியாதவை அல்ல ஆனாலும் கோட்பாயாவிடம் இருந்து அந்த ஆயுதங்களை விலை கொடுத்து பெற பாகிஸ்தான் முன்வந்தமையின் பின்னணியில் பலமான போரியல் வியூகம் ஒன்று காத்துக் கிடப்பதை இந்தியா அவதானித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவிற்கு தலையிடி கொடுக்கும் நோக்கில் பாகிஸ்தானில் தயாரான “இஸ்லாமிய தீவிரவாதம” என்ற வெடிகுண்டு அமெரிக்க தலையீட்டால் பாகிஸ்தானில் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுப்பதற்கும் தங்கள் தயாரிப்பினை மறைப்பதற்கு ஒரு தளம் பாகிஸ்தானுக்கு தேவைப்பட்டது அதற்குரிய சரியான களமாக பாகிஸ்தான் தெரிவு செய்துள்ள இடம் தான் இலங்கை.

இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காட்டு பிரதேசங்களில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதக் குழுக்களை தங்க வைப்பதறகு ஸ்ரீலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது.

குறிப்பாக லக்ஷர் தொய்பா அமைப்பின் தளமாக இலங்கையின் கிழக்கு பகுதியை மாற்றுவதே ஸ்ரீலங்காவின் திட்டம். இது குறித்து இந்திய ஊடகங்கள் கூட அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளமை நினைவு கூரத்தக்கது.

இந்த நடவடிக்கை குறித்து மோப்பம் பிடிப்பதற்கு இந்திய புலனாய்வு பிரிவு அனுப்பிய “புடவை வியாபாரிகளை” ஸ்ரீலங்கா அரசாங்கம் கைது செய்து அவர்களின் முயற்சிகளையும் தடுத்து விட்டது.

இதனால் இந்தியாவின் கவலை மேலும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு செக் வைப்பதற்கான நகர்வுகளில் ஈடுபடத் தொடங்கியது இந்தியா. இந்தியாவின் இந்த நகர்வில் எதிர்பாராத திருப்பமாக சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் அமைந்து விட்டது. இது இந்தியாவிற்கு மேலும் தலையிடியை அதிகரித்து விட்டது.இரு முனை தாக்குதலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டது.

எதிர் கட்சிகளின் சார்பில் சரத் பொன்சேகா போட்டியிட்டால் வெற்றி பெறும் வாய்ப்புகள் இருப்பதை அறிந்த இந்தியா உடனடியா எதிர் கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்களை இந்தியாவிற்கு அழைத்து சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என “அறிவுறுத்தி” அனுப்பியது.

இந்தியாவில் இருந்து திரும்பிய பின்னர் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பதற்கு ரனில் விக்கிரமசிங்க முன்வைத்த 10 நிபந்தனைகள் இந்தியாவால் தயாரானவை.
அதனை ஏற்றுக் கொண்டும் அவர் போட்டியிட்டால் அவரை போட்டு தள்ளவும் தாயராகவுள்ளது இந்திய புலனாய்வு பிரிவு.
இதன் மூலம் மகிந்தவின் வெற்றி வாய்பினையும தட்டிப்பறிப்பது இந்தியாவின் நிலைப்பாடு.

எனினும் ரனில் விக்கிரமசிங்க என்ற தோல்வியின் நாயகனை நம்பி மகிந்தவை பகைத்துக் கொள்ளவும் இந்தியாவிற்கு விருப்பம் இல்லை.

அதனால் மகிந்தவின் பாகிஸ்தானிய ஆதரவுப் போக்கினை மாற்றுவதற்கு சில நகர்வுகளை இந்தியா ஆரம்பித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களின் ஒருவரான பிராணப் முகர்ஜயை இலங்கைக்கு அனுப்பி தனது ஆட்டத்தை ஆரம்பித்தது இந்தியா.

வடக்கு கிழக்கு இணைப்பு என்ற தனது பிரம்மாஸ்திரத்தை எடுத்துள்ளது இந்தியா இதற்கு இணங்குவது என்பது மகிந்தராஜபக்ச அரசியல் தற்கொலை செய்வதற்கு சமனாது என்பது இந்தியாவிற்கு தெரியும்.

அதற்கு அடுத்து சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்கில் இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்தது தான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நாங்கள் தரிசித்த சூரிச் காட்சிகள்.

இலங்கையின் சிறுபான்மை கட்சிகள் என்பன பல கூறுகளை கொண்டவை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவு இந்தியாவின் தீவிர விசுவாசிகளை கொண்டுள்ளது.இரா சம்பந்தன் சுரேஸ் பிரேமசந்திரன் போன்றவர்கள் இந்தியா சொல்லும் இடத்தில் தான் சிறுநீர் கூட கழிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கின்றார்கள்.

மறுபுறம் ஸ்ரீகாந்தா மற்றும் கிஸோர் ஆகியோர் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அனுபவிக்கும் சகல சுகபோகங்களையும் அனுபவிக்க வேண்டும் அதற்கு மகிந்தரின் காலை நக்குவது தான் ஒரே வழி என்று புதிய பாதை வகுத்தவர்கள்.

மாவைசேனாதிராஜா இதில் யார் பக்கம் சேர்வது என்பது தெரியாமல் அடிக்கடி குழம்பிப்போவாதாக தெரிகின்றது.
மறுபுறம் அரியநேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருவாக்கப்பட்ட போது வெளியிடப்பட்ட பிரனடனத்தில் இருந்து விலகாமல் இருப்பதற்கு விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவால் பாலூட்டி சீராட்டி வளர்க்கப்பட்ட ஈ.பி.டி.பி தற்போது முற்றிலும் மகிந்த சகோதரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. டக்ளஸ் விரும்பினாலும் வெளியேற முடியாதபடிக்கு இறுக்கமான முடிச்சுகளை அவரை சுற்றி போட்டுள்ளது ஆளும் தரப்பு.

இதே நிலை தான் தொண்டமான் மற்றும் சந்திரசேகரனுக்கும் இவர்களின் ஊழல் மோசடிகள் குறித்து அத்தனை ஆதாரங்களும் பசிலின் மேசையில் தயார் நிலையில் இருக்கின்றன. இவர்கள் கட்சி மாறினால் கைது செய்யப்படும் அவல நிலையில் பாவம் மலையகத்தின் மக்கள் பிரதிநிதிகள்.

மறுபுறம் தீவிர மேற்குலக ஆதரவுடன் ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் இயங்கி வருகின்றார்கள்.அவர்களின் நிழல் உலக வர்த்தக தொடர்புகள் மேற்குலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன் செழிப்பாக நடப்பதால் அவர்கள் மேற்குலகம் சொல்வதை செய்வதற்கு தயாராகவுள்ளனர்.

இப்படியான மாறுபட்ட அரசியல் சித்தாந்தங்கள் கொண்டவர்களுடன் புலி எதிர்பிற்கு அப்பால் அரசியல் அறியாத ஆனந்தசங்கரி,சித்தார்தன்,சிறீதரன் கோஷ்டியும் இலங்கையின் அரசியில் தவிர்க்க முடியாத அங்கங்களாகவி விட்டனர்.

இந்தியாவிற்கு எப்போதும் நம்பிக்கைக்குரிய விசுவாச நாயகா பரந்தன் ராஜனும் அவருடைய ஈ.என்.டி.எல்.எப்பும் மட்டும் தான் மிச்சமாய் இருக்கின்றது என்பது வேடிக்கையான உண்மை; இந்தியாவில் தஞ்சமடைந்த முன்னாளர் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் இலங்கையின் அரசியலை மறந்து போனதாலும் அவரை இலங்கை அரசியல் மறந்து விட்டதாலும் அவரை இனி நம்பி பயனில்லை என்பது இந்திய எஜமானர்களின் நிலைப்பாடு.

இந்தியாவில் இருந்தே இந்த சந்திப்பிற்கான அழைப்பு அனைத்து தரப்பிற்கும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரசாங்கத்தில் அங்கம் வகிகும் டக்ளஸ், தொண்டமான், போன்றவர்கள் முதலில் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பதாக போதும் மகிந்த ராஜபக்சவின் வேண்டுதலின் பேரில் அவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கின்றது.

இவர்கள் கலந்து கொள்ளாவிட்டால் இந்தியா தன் மீது கோப்பட்டு விடும் என்பது மகிந்தரின் கவலையாக இருந்துள்ளது.

ஆனால் கூட்டத்தின் ஆரம்ப நாளில் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்சி நிரலை பார்த்த போது தான் இந்தியாவின் ஆட்டம் இவர்களுக்கு விளங்கியுள்ளது.

தமிழர் தகவல் மையம் என்ற பெயரில் இந்தியா ஏற்பாடு செய்யத இந்தரை சந்திப்பின் பிரதான நோக்கம் தாங்கள் கைகாட்டும் ஒரு வேட்பாளருக்கு அல்லது கூட்டணிக்கு சிறுபான்மை மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதே.

அதனால் தான் இலங்கையின் எதிர் காலத் தேர்தல்களின் சிறுபான்மை மக்களின் வகிபாகம் என்ற விடயத் தலைப்புடன் நிகழ்சி நிரல் வழங்கப்பட்டது.

மகிந்தரின் விசுவாசிகள் உடனடியாகவே இதனை லலித் விரதுங்கவிற்கு தெரியப்படுத்தவும் அலரி மாளிகை விழித்துக் கொண்டது.

அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் அனைவருக்கும் தேர்தல் குறித்த கலந்துரையாடலை மேற்கொண்டு நடத்துவதற்கு இடமளிக்க வேண்டடாம் என்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தொண்டமான் டக்ளஸ் போன்றவர்கள் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல்கள் குறித்து பேசுவது பயனற்றது என்று கூறி அதனை தடுத்துள்ளனர். அடுத்த விடயம் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் சுதந்திர நடமாட்டம் பற்றியதாக இருந்துள்ளது.

இந்த விடயத்தில் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைவதை எவராலும் தடுக்க முடியாது என்றும் அதனை ஆரம்ப புள்ளியாக வைத்து தனது காய்களை நகாத்தலாம் என்பதும் இந்தியாவின் எதிர்பார்ப்பு.

ஆனால் அதற்கும் ஆப்பு வைத்தது இலங்கை எதிர் வரும் டிசம்பர் மாதம் முதல் முகாம்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாடும் சுதந்திரம் வழங்கப்படும் என்றும் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் மீள் குடியேற்றப்படுவர்கள் என்றும் பசில் ராஜபக்ச அறிவித்தனை விடுத்தார்.

இந்தியா போட்ட திட்டங்களை அடித்து நொருக்கியது மகிந்தரின் விசுவாப்படை.

இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்பட்டு விடுவார்கள் அவர்களின் நடமாட்ட சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இனி அவர்கள் பற்றி பேசுவதற்கும் ஒன்று படுவதற்கும் எதுவும் இல்லை என்று கூட்டத்தில் கலந்து கொண்ட அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் முன்வைத்த வாதம் வலுப்பெறவே ஏற்பாட்டாளர்களால் அதனையும் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நெருக்கடி நிலைகளை இந்தியாவோ இந்த சந்திப்பை ஏற்பாடு செய்யத தமிழர் தகவல் மையம் மற்றும் ஈ.என்.டி.எல்.எப் போன்ற அமைப்புகளோ எதிர்பார்க்கவில்லை.
இதனால் மாற்று ஏற்பாடுகள் அல்லது மாற்று வியூகங்கள் எதுவும் அற்ற நிலையில் இந்த கூட்டம் முடிவடைந்துள்ளது.

தமது எஜமானர்களுக்கு விசுவாசமாக நடத்து கொண்ட திருப்தி அங்கு விடுதியின் முகப்பில் நின்று கொண்டிருந்த எங்கள் இனத்தின் பிரதிநிதிகள் முகங்களில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

பயணச் செலவிற்கென இந்தியாவினால் வழங்கப்பட்ட 3000 அமெரிக்க டொலர்களை எவ்வாறு செலவு செய்யலாம் என்ற பேச்சும் அங்கு கேட்டுக் கொண்டிருந்தது.

தொண்டமானைப் போல நாங்களும் 5 நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்ற சிலரின் ஆதங்கமும் எனது காதில் விழுந்தது.

தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்களின் தலைவிதிகளை தீர்மானிக்கப் போவதாக சொல்லிக் கொள்ளும் இந்த அரசியல் தலைவர்களின் கரங்களில் எங்கள் உறவுகளின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டு விட்டதே என்ற வேதனையில் அங்கிருந்து விடைபெற்றேன்.

தமிழ் மக்களின் இழப்புகளின் மீதாக தமது அரசியல் இருப்புகளை உறுதிப்படுத்த துடிக்கும் இவர்களின் கரங்களில் தமிழர்களின் தலைவிதியை தர முடியுமா ? சிந்திக்கத் தூண்டும் கேள்வி தான் ஆனால் தமிழர்களின் தலைவிதி இனி யார் கையில் என்தை போலவே இப்போதைக்கு விடை தெரியாத மற்றுமொரு கேள்வியாகத் தானே இதனையும் பார்க்க முடியும்.

முட்கம்பி வேலிக்குள் முகம் புதைந்து நிற்கும் எனது உறவுகளின் நினைவுகளும் தாயகத்தில் நான் வாழ்ந்த மண்ணில் கால் பதிக்கும் கனவுகளமாய் மீண்டும் ஒரு விடியல் பொழுத்துக்கான ஏக்கத்துடன் அங்கிருந்து நகரத் தொடங்கின என் கால்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.