இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் திட்டம் உண்மையா அல்லது எங்களை ஏமாத்தும் நாடகமா என உன்னிப்பாக அவதானிப்போம் – ஐநா

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை மீள் குடியேற்றும் அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத் தக்கது என்ற போதிலும், மீள் குடியேற்ற நடவடிக்கைகளின்  தரம் குறித்து உன்னிப்பதாக அவதானிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

holmesதமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்ததாக கடந்த மே மாதம் அரசாங்கம் அறிவித்த போது மொத்தமாக 300000 இடம்பெயர் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
 
கடந்த வாரம் மெனிக் பாம் முகாமிற்கு விஜயம் செய்த போது இடம்பெயர் மக்களின் எண்ணிக்க அரைவாசியாக குறைவடைந்திருந்ததாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார விசேட பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.
 
135000 பேர் தற்போது இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ளதாகவும், நாள்தோறும் 3000 இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எதிர்வரும் ஜனவரி மாதம் முடிவடைவதற்குள் சகல மக்களையும் மீள் குடியேற்ற முடியும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், மக்கள் எவ்வாறு மீள் குடியேற்றப்படுகின்றனர், அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் உரிய தரத்தில் காணப்படுகின்றனவா என்பது குறித்து கவனிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நிலக்கண்ணி வெடி அகற்றுதல் மற்ம் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.