யுத்தக்குற்றம் புரிந்தவர்களை கட்டாயம் தண்டிக்கவேண்டும் – நவனீதம்பிள்ளை

யுத்தக் குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். அயர்லாந்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர் யுத்தத்தின் போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஊடகவியலாளர்களிடம் உரையாடியபோதே மேற்கண்டவாறு பேசிய போதே  தெரிவித்தார்.

nava-774167bmpஅவர் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை  மீறல்கள் தொடர்பாக தெரிவித்தாவை வருமாறு:

யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.  அது வரைக்கும் நான் இந்தச் சர்வதேச விசாரணைக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்துக்  கொண்டே  இருப்பேன். யுத்தக் குற்றங்களை பாரதூரமான அளவில் மேற்கொள்பவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். இக்குற்றவாளிகளுக்குத் தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் கலாசாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். எனவேதான் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையைப் போன்ற நாடுகளில் கட்டாயம் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறேன்.

நான் இலங்கை விடயத்தில் மாத்திரம் இவ்விசாரணைகள் தேவையென்று கூறவில்லை.  அதேநேரம், எல்லா நாடுகளும் அந்தந்த நாடுகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பொறுப்பு கூறுவதற்குத்  தயங்கக் கூடாது  என்றும் அவர் குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.