இலங்கை அகதிகள் குறித்து சர்வதேச சமூகம் உரிய அக்கறை செலுத்தவில்லை: சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையில் இருந்து புலம் பெயரும் அகதிகள் குறித்து சர்வதேச சமூகம் உரிய அக்கறை செலுத்தவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்த கருத்தை தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் ஜரிக்கன்.

amnesty-150x150இலங்கை தமிழ் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான சூழல் ஒன்றை தேடி அந்த நாட்டில் இருந்து தொடர்ந்துவெளியேறி வருவதாகவும், அவர்களின் பாதுகாப்பான இடம்பெயர்விற்கும், புகலிட கோரிக்கைக்கும் சர்வதேச சமூகம் ஒத்துழைப்புகளை வழங்குவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகத்தின் இந்த நடவடிக்கை காரணமாகத்தான் அப்பாவி தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேர்வதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.