இராணுவத்தினருக்கான வீடமைப்புத் திட்டங்கள் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்களுக்குத் திட்டம்

இராணுவத்தினருக்கான வீடமைப்புத் திட்டங்கள் பலவற்றை விரைவில் அமைத்து முடிக்கவுள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம் அவற்றில் பெரும்பாலானவற்றை தமிழ் பிரதேசங்களான வவுனியா, திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.

green-question-mark9சரத் பொன்சேக்கா நடத்தப்படும் முறை குறித்து அதிருப்தியடைந்துள்ள படை வீரர்களைத் திருப்திப் படுத்தும் நோக்கில் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வரும் அரசு அதன் ஒரு கட்டமாக படையினருக்கான வீடமைப்புத் திட்டங்கள் குறித்து அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. இது போன்ற ஒரு வீடமைப்புத் திட்டம் சில தினங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சவினால் கெக்கிராவ பகுதியில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இது போன்ற பல வீடமைப்புத் திட்டங்களை தமிழ்ப் பகுதிகளில் மேற்கொள்வதன் மூலம் தமிழ்ப் பகுதிகளின் இனவிகிதாசாரத்தை மாற்றியமைப்பதற்கும் தமிழ் பகுதிகளைக் கண்காணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.