கலியோன் குழும தலைவர் இராஜ் இராஜரட்னம் தன்மீதான குற்ற சாட்டினை மறுத்துள்ளார்

கலியோன் குழும தலைவர் அண்மையில் உள்ளக வியாபார  நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டத்திற்கு முரணாக இலாபமீட்டியதாக  கைது செய்யப்பட்டு பின்னர் 100 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

raj-rantnamதற்போது அவரும் அவரது சட்டவாளரும் வழக்கினை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நீதி மன்றத்தில் தன் மீதான குற்ற சாட்டினை மறுத்த திரு இராஜ் அவர்கள் தனது வியாபார முயற்சியில் இலத்திரனியல் சாதனங்களை பயன் படுத்தி தொலைபேசிகளை ஒட்டு கேட்டதனை ஏற்று கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். ஒட்டு கேட்பது அமெரிக்க நாட்டின் யாப்பினை மீறும் செயல் எனவும் கூறியுள்ளார்.

தாம் தொலைபேசியில் உரையாடியது பகிரங்கமாகவே என்றும் அது எந்தவகையிலும் இரகசியமானது அல்ல எனவும் தெரிவித்துள்ள இராஜ் அவர்கள்.  ஒட்டு கேட்பதற்கான நீதிமன்ற ஆணை ஆனது தகவல்களை பெறுவதற்கான மாற்று வழியே தவிர அதுதான் வழி என்று இல்லை என்றும் கூறியுள்ளார். ஆகவே ஒட்டு கேட்பதற்கு முன்பாக பகிரங்கமாக யாரும் தன்னை சாதாரண முறைப்படி அணுகவில்லை எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக  இராஜ் அவர்களின் எதிராளிகள் சட்டத்தரணிகள்  கருத்து கூறாது மெளனம் காத்ததாகவும் கூறப்படுகின்றது. பங்கு சந்தையில் ஒட்டு கேட்கும் முரையினை எதிர்கொண்ட முதலாவது வழக்கு இதுவென்பதால் அனைத்தி நிறுவனங்களும் இந்த வழக்கினை இராஜ் இராஜரட்னத்திற்கு சாதகமாக்கவே விரும்புகின்றன. ஆகையால் பல நிறுவனங்கள் இராஜ் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.