தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றதும் தமிழருக்கு நல்ல தீர்வை முன் வைப்பாராம் – இது எப்பிடி இருக்கு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றதும் வடக்கு கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வை முன்வைப்பர் என்று பிரதி அமைச்சர் கே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு:

laughing-guy-thumb168075ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்டுவார். அந்த வெற்றியை அவ ருக்குப் பெற்றுக் கொடுக்க நாம் பாடுபடு வோம்.

இத்தேர்தலில் வெற்றி பெற்றதும் அவர் வடக்கு கிழக்கு தமிழர்களினதும், தோட்டப்புற தமிழர்களினதும் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை முன்வைப்பார் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இந்நாட்டு மக்கள் அனைவரும் எதுவித இனபாகுபாடின்றித் திருப்திப்படும் வகையில் அத்தீர்வு அமையும் என்பதில் எதுவித சந்தேகமும் எமக்கில்லை.

அதற்காக நாம் அவரை இத்தேர்தலில் வெற்றிபெறச் செய்யவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற வேண்டும் என நாம் மனதார வாழ்த்துகிறோம் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.