லண்டனில் தேசியத் தலைவரின் மாவீரர் தின உரைகள் நூல் வடிவில் வெளியிடப்படவுள்ளது

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கடந்த கால மாவீரர் தின உரை நூல் வடிவில் வெளிவந்துள்ளது.

1989 ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாவீரர் தினத்திலிருந்து கடந்த வருடம் வரை தேசியத் தலைவர் அவர்களால் நிகழ்த்தப்பட்ட மாவீரர் தின உரைகளின் தொகுப்பு, நூல் வடிவில் வெளியிடப்படவுள்ளது.

tamil_nationஇரண்டு பத்தாண்டு காலத்தில் தமிழீழம் எதிர்கொண்ட சவால்கள், அரசியல் நெருக்கடிகள், பெற்ற வெற்றிகள் என்பவற்றை பிரதிபலிப்பதாக அமைந்த இக்கொள்கை விளக்கவுரைகள் தமிழ் மக்களிற்கு சொல்லி நிற்கின்ற செய்திகள் பலவாக இருக்கின்றன.

தேசியத்தலைவர் அவர்களது ஐம்பத்தி ஐந்தாவது பிறந்த தினமாகிய நவம்பர் 26ம் திகதி, மாலை ஆறுமணிக்கு பின்வரும் இடங்களில் இந்நூல் வெளியிட்டு வைக்கப்படவிருக்கிறது என்பதை அறியத்தருகிறோம்:

வடக்கு லண்டன்:
என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம்.
61-65 Church Lane Edmonton, London N9 9PZ

கிழக்கு லண்டன்:
இல்போட் செல்வ விநாயகர் ஆலயம்
299 – 303 LEY STREET, ILFORD, ESSEX IG1 4BN

மேற்கு லண்டன்:
ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம்
5 Chapel Road, Ealing, LondonW13 9AE

தெற்கு லண்டன்:
ரூற்றிங் முத்துமாரியம்மன் ஆலயம்:
180-186 UPPER TOOTING ROAD, TOOTING, LONDON SW17 7EJ.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.