லாகூர் விளையாட்டரங்கில் துப்பாக்கிப் பிரயோகம் : இலங்கை வீரர்கள் 6 பேர் காயம்

98308லாகூரில் இடம்பெற்று வரும் பாகிஸ்தானுடனான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியின் போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை அணி வீரர்கள் ஆறுபேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திலான் சமரவீர, தாரங்க பரணவித்தான, அஜந்த மெண்டிஸ், சங்ககார ,மகேல ஜெயவர்தன மற்றும் துணை பயிற்றுவிப்பாளர் ஆகியோர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மகேல ஜெயவர்தன தனது காலில் சிறு காயம் ஏற்பட்டு உள்ளதாக அவரது மனைவிடம் தொலைபேசியில் கூறியதாகத் தெரிவிக்கக்கடுகிறது. .

இச்சம்பவத்தின் போது 3 பொலிஸார் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தற்போது லாகூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.