ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொன்சேகாவுடன் இணைந்துள்ளார் எஸ்.பீ.திசாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பீ.திசாநாயக்க ஜெனரல் சரத் பொன்சேக்காவை சந்தித்து நிபந்தனையற்ற வகையில் அவருக்கு ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

SB.tissaஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை  சந்தித்து, விரிவாக கலந்துரையாடிய பின்னரே திசாநாயக்க, சரத்பொன்சேக்காவை சந்தித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாவிட்டால் தான் அதில் போட்டியிடப் போவதாக எஸ்.பீ. பகிரங்கமான முறையில் ஊடகங்களுக்கு முன்னர் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
 
இந்த நிலையில் பொது வேட்பாளராக பொன்சேக்காவை களமிறக்குவது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் தீர்மானித்ததை தொடர்ந்து, இந்த தீர்மானத்திற்கு அமைவாக பொன்சேக்காவுக்கு பேராதரவை வழங்க எஸ்.பீ. தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.