ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸவுக்கு எதிரான பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நியமனம்

ஓய்வு பெற்ற முப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத்பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலின் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.

 தமது பொதுவேட்பாளர் குறித்து இன்று அறிவிக்கப்படும் என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்து வந்த நிலையில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த தகவலினை தெரிவித்தார்.

SarathFonsekaஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
தமது வேட்பாளரை அறிவிக்கும் முகமாக இன்ற நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இந்த கருத்தினைத் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.