தமிழர்களின் எதிர்பார்ப்பும், மாவீரர்தினமும்…

இலங்கையில் தமிழ்மக்களின் உரிமைக்காக உண்மையாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 18.5.2009 உடன் முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் பல தமிழ் அரசியல்வாதிகளும் அவ்வறிவித்தலை தலைமேல் கொண்டு தாம்தான் தமிழினத்தின் உண்மைக் காவலர்கள் என்ற தோரணையில் தமிழ் மக்களின் மனங்களை மேலும் புண்ணாக்கி வருகின்றனர்.

maveerarஅந்தவகையிலேயே தமிழர்களின் தானைத் தலைவன், எம்மக்களின் மீழ்ச்சிக்காய் அவதாரம் எடுத்த மாவீரன், தமிழ் மக்களின் ஏக தலைவன் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் மீது வசைபாடிய கருணாநிதி இன்று எம் தலைவன் வீழ்ந்து மடிந்து விட்டதாக நீலிக் கண்ணீர் வடித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வடக்கில் அகதிமுகாம்களில் உள்ளவர்கள் மட்டும் திறந்தவெளிக் கைதிகளாக இல்லை. நாட்டில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தமது சுதந்திரத்தை வெளிப்படுத்த வகையில்லாது உள்ளமை அனைவரும் சிங்களவர்களால் கைதிகள் என்ற மனநிலையை உருவாக்கியுள்ளது.

எது எவ்வாறெனினும் தமது உத்தமர்களான, தமது இன்னுயிர்களை எமது உரிமைக்காய் உவந்தளித்த மாவீரர்களுக்கு எமது மக்கள் தமது நன்றியினை தெரிவிக்கக் காத்திருக்கிறார்கள்.

இந்த மாவீரர்தினம் எமது மக்களின் உரிமைப்போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எந்தளவிற்கு தென்பு ஊட்டுவதாக இருக்கும், அல்லது இலங்கை அரசாங்கம் நினைத்துள்ளது போன்று உண்மையிலேயே செயலிழந்து விட்டதா என்பதையும் தெரியப்படுத்தும் என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்தாகவுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.