பிரபாகரன் பிறந்த நாள்: இனிப்புகள் வழங்கி கொண்டாடிய கிராமத்து இளைஞர்கள்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 55வது பிறந்தநாள். இதை முன்னிட்டு உலகெங்கும் உள்ள தமிழின உணர்வாளர்கள் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். இதேபோல் சேலத்தில் பெரியார் திராவிடக் கழகத்தினர், மனித உரிமைகள் அமைப்பினர், தமிழின உணர்வாளர்கள் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைத்து பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடினர்.

சேலத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை நேற்று இரவு போலீசார் அப்புறப்படுத்தினர். சில இடங்களில் போலீசாருக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

salam4

போலீசார் பேனர்களை அப்புறப்படுத்தினாலும், கிச்சிப்பாளையம் என்ற கிராமத்தில் சுமார் 20 இளைஞர்கள் மீண்டும் மீண்டும் பிரபாகரனின் பேனர்களை வைத்து அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.

– நக்கீரன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.