சீமான் இரவோடு இரவாக விமானத்தில் ஏற்றப்பட்டு நாடுகடத்தப்பட்டார்

கனடா அரசின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான கொள்கைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக விசாரணைக்குட்படுத்தப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் இயக்குநர் சீமானை கனடா அதிகாரிகள் இந்திய விமனத்தில் ஏற்றி நாடு கடத்தி விட்டதாகத் தெரிகிறது.

seeman1_inபெருமளவிலான ஈழ மக்கள் இரவோடு இரவாக திரண்டு விமான நிலையத்தில் நிற்க அவரை அதிகாரிகள் கொண்டு வந்து விமானத்தில் அனுப்பி வைத்தனர். இன்று இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு அவர் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் வருகிறார், அவருக்கு தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களும், நாம் தமிழர் அமைப்பினரும் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.