இலங்கை விமானப்படையின் தாக்குதல் ரக உலங்கு வானூர்த்தி எம்.ஐ.24 புத்தள காட்டுப் பகுதியில் வீழ்ந்துள்ளது

இலங்கை விமானப்படையின் எம்.ஐ.24  தாக்குதல் ரக உலங்கு வானூர்த்தி ஒன்று புத்தள காட்டுப் பகுதியில் இன்று பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்துள்ளது.
 
5 வான் படையினருடன் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக விமானப்படைத்தரப்பு அறிவித்துள்ளது.

mi-24-20000217-f-8825t-001தொழில்நுட்ப பிரச்சினையே இந்த விபத்துக்கான காரணம் என உடனடியாக அரசாங்கம் அறிவித்த போதும் விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த உலங்கு வானூர்தி, தற்போது எரிந்து கொண்டிருப்பதாகவும் உலங்கு வானூர்த்தியில் சென்ற 5 பேர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மாவீரர் தினமான இன்று இந்த உலங்கு வானூர்தி வீழ்ந்து நொருங்கியுள்ளது, சில சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. உண்மையில் இது பறப்பில் ஈடுபடும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீழ்ந்ததா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.