புலி மகன்!

annai-gunshootஏன் பிறந்தோம்
என்றிருந்த
எம் தமிழர்கள் எல்லோருக்கும்
மகனாய்
(பிரபாகரா)நீ பிறந்தாய்…!

சிங்களச் சிங்க குரல் கேட்டு கேட்டு
மனித குழந்தையாக
இருந்த நீ
புலி மகனானாய்…

அசைய அசைய
கையும் காலும் கூட
ஆயுதமானது…!

புலியும் வேண்டாம்
சிங்கமும் வேண்டாம்
மனிதர்களை
மனிதர்களாக வாழவிடுங்கள்
என்றார்கள்
சமாதானப் குருட்டு சிங்கங்கள்!

தமிழனின்
சதைத் தூண்டு
வாயில் தொங்கும்
சிங்கள சிங்கத்திற்கு
உங்கள் மனித பாஷை
எப்படிடா கேட்கும்?
அட ,அறிவு கெட்ட மடப் பதரே!

புலிகள் எல்லாம் காலி
எனற
சொன்ன சிங்கள சிங்கங்கள்

பாதுகாப்பாய்
பதுங்கியபடி
புலிக் காய்ச்சலோடு…

 புலியடிக்கும் வரை…

புலிக் காய்ச்சல்
உங்களைக் கொல்லும்…!

மனிதன்,சென்னை

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.