தமிழகமெங்கும் மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்

ராமதாஸ் தலைமையில் மாவீரர் தின அஞ்சலி

திருச்சியில் தமிழர் மாணவர் சங்கம் சார்பில், சங்கம் ஓட்டலில் சமச்சீர் கல்வி கூட்டம் நடந்தது.  இக்கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையேற்றார்.

இகூட்டத்தின் போது மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களுக்கு ராமதாஸ், ஜி.கே. மணி உட்பட ஆயிரக்கணாகானோர் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

ramathasangli

ramathasangli2

பட்டுக்கோட்டையில் மாவீரர் தின அஞ்சலி

பட்டுக்கோட்டையில் மணிக்கூண்டு அருகில் நாம் தமிழர் இயக்கத்தின் சக்திவேல் தலைமையில் 300 பேர் மெழுகுவர்த்தி ஏந்தி மாவீர தின அஞ்சலி செலுத்தினர்.

pattukootai1

pattukootai2

தஞ்சாவூரில் மாவீரர் தின அஞ்சலி

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் மதிமுகவினர், நாம் தமிழர் இயக்கத்தினர், இளந்தமிழர் இயகக்த்தினர், தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் மாவீரர் தினத்தை முன்னிட்டு  வீரவணக்க அஞ்சலி செலுதினர்.

பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரம் பேரணி சென்றனர்.

புதுக்கோட்டையில் மாவீரர் தின அஞ்சலி

புதுக்கோட்டை மாவட்டம் திருவரன்குளத்தில் தோப்புக்கொல்லை இலங்கை அதிகள் முகாமில் இன்று மாலை மாவீரர் தின அஞ்சலி செலுத்தினர்.

ஆண்கள், பெண்கள், சிறுவர்,சிறுமிகள் என்றூ 500 பேர் அஞ்சலில் செலுத்தினர்.

இலங்கையில் அமைதி திரும்பவேண்டும் – நாம் தாய்மண் திரும்ப வேண்டும் என்று கோசம் எழுப்பினர்.

pudukkoottai1

pdukkootai3

pdukkootai2

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.