இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் ஜனவவரி மாதம் 26ம் திகதி ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி ஜனாதிபதித் தேர்தல்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

generalஜனாதிபதித் தேர்தல்களுக்கான வேட்பு மனுக் கோரல்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் திகதி கோரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
டிசம்பர் மாதம் 17ம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 வரையில் ஜனாதிபதித் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்படுகிறது.
 
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாஇ புதிய இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன மற்றும் பௌத்த பிக்கு ஒருவர் ஆகியோர் அனேகமாக தேர்தல்களில் போட்டியிடக் கூடுமென அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் எஞ்சியிருக்கும் நிலையில் இந்தத் தேர்தல் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை தோதல்கள் ஆணையாளருக்கும் எதிர்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
 
தேர்தல்கள் செயலத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரத்ததலைவர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இதன் போது எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்கள் நீதியானதும், சுயாதீனதுமான தேர்தலாக நடைபெறவேண்டும் என எதிர்கட்சியினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
 
இந்த சந்திப்பபையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கiயில், இந்த சந்திப்பில் சுயாதீனமானதும் நேர்மையானதுமான ஒரு தேர்தல் நடத்தப்பட்டு, மக்களின் விருப்பத்திற்கேற்ப ஓரு தலைவர் தெரிவு செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் ஏறப்படுத்தி கொடுக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்ததாக கூறினார்.
 
அத்துடன் தேர்தல்களின் போது அரச சொத்துக்கள் குறித்து அதிக கவணம் செலுத்தும் படி வலியுறுத்திய அவர், அரச வாசஸ்தலங்கள், அரச காரியலயங்கள் மற்றும் அரச வாகனங்கள் என்பவற்றினை தேர்தல் பிரசாரங்களுக்காக பயண்படுத்துவதை தடுப்பதுடன், தேர்தல் பிரசாரங்களுக்காக உலங்கு வானூர்திகள் பயண்படுத்தப்படுமாயின் அதற்கான கொடுப்பணவுகள் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் எனவும்; கேட்டுக்கொண்டார்.
 
அத்துடன் நடைபெறவுள்ள தேர்தல்களில் தேர்தல்கள் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், சர்வதேச கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவேண்டும் என தாம் வலியுறுத்தியதாகவும், இதற்கு அவர் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் என உறுதியளித்தாகவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.
 
மிகவும் முக்கியமாக இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலுள்ள மக்கள் தேர்தல்களுக்கு முன்னதாக அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என வலியுறுத்தியதுடன், குறித்த முகாம்களுக்கு எதிர்கட்சியினரும் தேர்தல் பிரசாரங்களுக்காக செல்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பவேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்தாக அவர் குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.