மாவீரர்களே எழுந்து வாருங்கள்..

எம் தேசத்தின் விடியலுக்காக வித்தாக
வீழ்ந்த மறவர்களே கல்லறை விட்டு எழுந்து வாருங்கள்
கரிகாலனின் வழியில் சென்று போர்க்களங்களில்
எதிரியை வீழ்த்தி சந்தன பேழைக்குள் உறங்கும்
எங்கள் மாவீரர்களே எழுந்து வாருங்கள்

Maveerarnaal2அன்னியரின் அடிமை விலங்கை உடைத்து
எரிமலையாகி எழுந்த சூரிய புதல்வர்களே
தமிழீழ மண்ணில் உயிர்த்து விடுங்கள்

கண்கள் மூடி உறங்கும் தோழனே
கல்லறையை விட்டு வெளியே வாருங்களேன்
கார்த்திகை தீபம் ஏற்றும் வேளையிலே
எங்கள் உள்ளம் துடித்து அழுகின்றோம்
கார்த்திகை பூக்களே எழுந்து வாருங்கள்

ஈழத்தின் வித்துக்களாய் தமிழ்ழீழத்தின் காவல்
தெய்வங்களாய் தேசிய தலைவனின் பிள்ளைகளாய்
தமிழ்ழீழம்தான் மூச்சென்று சருகாக வீழ்ந்த வீர மறவர்களே
உங்கள் பாதங்களை மலர் தூவி வணங்குகின்றோம்.

– பாமினி

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.