பொதுநலவாய நாடுகளது மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு பிரித்தானியாவுடன் இணைந்து கனடாவும் எதிர்ப்பு

எதிர்வரும் 2011ம் ஆண்டு 53 ஆவது பொதுநலவாய நாடுகளது மாநாட்டை இலங்கையில் நடத்துவது குறித்த யோசனைத் திட்டத்திற்கு கனேடிய அரசாங்கமும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
 
பொதுநலவாய நாடுகளது மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு கனடா ஆதரவளிக்காது என அந்நாட்டு பிரதமர் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

canadaflagயுத்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
கனடாவில் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது தமிழ் வாக்காளர்களின் நன்மதிப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
 
இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென கனடா கோரிக்கை விடுத்துள்ளது.
 
இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு கனடா பூரண ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.