சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய ‐ இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையே பேச்சு

சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
 
தற்போது நடைபெற்று வரும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கலந்து கொண்டுள்ள இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

australiaflagஇராணுவ ரீதியான யுத்தத்தை வெற்றி கொண்டால் மட்டும் போதாது எனவும், சமாதானத்தையும் வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் தமக்கு சிறந்த எதிர்காலம் காணப்படுகின்றதென சகல இன சமூக மக்களும் நம்பக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.