கோத்தபாய ராஜபகச – இலங்கை ராணுவ தளபதி மோதல்

சரத் பொன்சேகா வசமுள்ள வாகனங்களை கைப்பற்ற வேண்டும் என்று இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபகச பிறப்பித்த உத்தரவு தொடர்பாக அவருக்கும் , இராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியாவுக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

laughing-1கடந்த 25 ஆம் தேதி இரவு பொன்சேகவின் அதிகாரப்ப்பூர்வ தங்குமிடத்துக்க்கு ராணுவ போலீசாரை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொன்சேகா வசமுள்ள வாகனங்களை கைப்பற்றுவதற்காக ராணுவ போலீசை அங்கு அனுப்பும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபகச, ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியாவுக்கு உத்தரவிட்டதாகவும், ஆனால் அவர் அதனை செய்லபடுத்த மறுப்புத் தெரிவித்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

பொன்சேகாவுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பைக் குறைப்பதன் மூலம் அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை ராணுவ வீரர்கள் தம்மீதே சுமத்துவார்கள் என்றும், தம்மைக் கல்லால் கூட அவர்கள் அடிப்பார்கள் என்றும் ஜெயசூரியா அப்போது கோத்தபாயவிடம் கூறியதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

ஆனால் அதன்பின்னரும் கோத்தபாய வலியுறுத்தியதோடு, தாம் உத்தரவு பிறப்பிப்பதால், இதைச் செய்ய வேண்டியது கட்டாயம் என்றும் வலியுறுத்தியதாலேயே ஜெயசூரியா மேற்கொண்டு அதனை மறுக்கமுடியாமல் போலீசாரை பொன்சேகாவின் இருப்பிடத்துக்கு அனுப்பியதாகவும் அத்தகவல் மேலும் கூறுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.