பிரபாகரனுக்கு தெரியும்-விடுதலைப்புலிகள் பாய்ந்து தாக்கும் காலம் வரும்!

ம.தி.மு.க. சார்பில், சென்னை தியாகராயநகர் பஸ் நிலையம் அருகில் நேற்று இரவு மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பேசினார்.

nedumaran-ayya’’ஈழ போரில் விடுதலை புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. அதை எப்படி முன்னெடுத்து செல்வது என்று பிரபாகரனுக்கு தெரியும்.

இடையில் சிலர் குழப்புகிறார்கள். ஆனால் உலக தமிழர்கள் ஏமாற மாட்டார்கள். விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. பதுங்கும் காலம் இது. பாய்ந்து தாக்கும் காலம் வரும்’’என்று பேசினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.