பொதுநலவாய நாடுகள் இடம்பெயர் மக்கள் குறித்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை, பொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் கோரியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளின் ரினிடாட் என்ட் டபேக்கோவில் கூடியுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Amnestyinternationalஇதன்படி, மக்களை தடுத்து வைத்துள்ள கொள்கையை இலங்கை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையை நாடுகளின் தலைவர்கள் முன்வைக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கேட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மக்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.