தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்த எமது முடிவை பொருத்தமான நேரத்தில் அறிவிப்போம் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இறுதி முடிவு பொருத்தமான நேரத்தில் வெளியிடப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

tnaஎதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தேர்தல் தொடர்பாகவும் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்த தகவல்கள் வெளியாவது தொடர்பிலும் கருத்து கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாம் ஆலோசனை நடத்தி வருகின்றோம். எனினும் இதுவரை முடிவுகள் எதையும் அறிவிக்கவில்லை. பொருத்தமான நேரத்தில் எமது முடிவினை நாம் வெளியிடுவோம்” என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.